
காவல்துறை அதிகாரி திரு. திருநாவுக்கரசு IPS அவர்கள் பேசும்போது, புத்தகங்களை கண்டால் ஓடுகின்ற குழந்தைகளை மாற்றி, புத்தகத்தை கண்டு ஓடி வர வேண்டும் என்ற நிகழ்வுதான் இன்றைய நிகழ்வு ரன் டூ ரீட். இந்த நிகழ்வினை எப்படியெல்லாம் புத்தகங்கள் வாழ்க்கையை மாற்றி அமைத்திருக்கின்றன என்பதனை இங்கே சொல்லிக்காட்டிய அகரம் பவுண்டேஷன் குழுவினருக்கு என்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த ஓட்டத்தை ஓடிவிட்டு வந்த போது எனது நுரையீரல் எல்லாம் ஆக்ஸிஜனைப்பெற்று ஒரு புத்துணர்வை பெற்றேன். ஒன்று புரிந்து கொண்டோம் ஓடினால் நுரையீரலில் ஆக்ஸிஜன் பெற்று உடல் வலுப்படும். படித்தால் உங்கள் உள்ளத்தில் ஆக்ஸிஜன் பெற்று உங்கள் வாழ்க்கை புத்துணர்வு அடையும். ஓடுவது உடலுக்காக, படிப்பது வாழ்க்கைக்காக. உங்களது உள்ளத்தை நீங்கள் தூய்மைப்படுத்த வேண்டும் என்று நினைத்தால் புத்தகத்தைப் படியுங்கள். புத்தகங்கள் ஒவ்வொரு மனிதனையும் புனிதனாக்கின்ற ஒரு அறிவுப்பெட்டகம்.