
எழுத்தாளர் அமரர் ஏ. எஸ். ராகவனின் மகளான மைதிலி நாராயணனின்
புனைபெயர் ஷைலஜா. இவர்
400 சிறுகதைகள், 12 நாவல்கள், 2 குறுநாவல்கள், 5 கட்டுரைகள் ,12 வானொலிநாடகங்கள், 3 தொலைக்காட்சி நாடகங்கள், கவிதைகள் என்று எழுதிவருவதுடன் கோலம், சமையல், பாட்டு, விளம்பரத்தில் குறும்படத்தில் பின்னணிக் குரல் கொடுப்பதுமாக மிளிர்கிறார்.
திருப்பாவை உபன்யாசம் செய்து வருகிறார்.
பாரதி விழாவின் போது நாடகத்தில் நடித்து பெங்களூரில் சிறந்த நடிகைக்கான விருது பெற்றவர்.
அமரர் ரங்கநாயகி அம்மாள் நினைவு நாவல் போட்டியில் இவர் எழுதிய 'திக்குத் தெரியாத காட்டில்' என்னும் நாவலுக்கு முதற் பரிசு கிடைத்துள்ளது.
இவற்றிற்கு மேல் ஒரு கலகலப்பான இல்லத்தரசி
மதியொன்றில்லை” என்ற இந்தக் கதை,
வெறும் பக்திக் கதையோ,
நகர–கிராம முரண்பாட்டுக் கதையோ அல்ல.
இது ஒரு சொல்லின் பொறுப்பைப் பற்றிய கதை.
ஒரு இளம் வயதில் சொன்ன ஒரு வாக்கியம்,
இன்னொருவரின் வாழ்வையே திசைமாற்றியிருக்கும் போது
அந்த வாக்கியத்தைச் சொன்னவன்
அதன் ஆழத்தை உணர்ந்த தருணமே இந்தக் கதை.
கதையை வாசிக்க:-https://solvanam.com/2025/08/10/மதியொன்றில்லை/