All content for Tamil Prince Podcast 👼 is the property of Tamil Prince and is served directly from their servers
with no modification, redirects, or rehosting. The podcast is not affiliated with or endorsed by Podjoint in any way.
Hi everyone,
Am from fictional character of book of mirdhath.
Books, cinema, Encyclopedia, Daily politics of world!
பால் பேத வன்முறையும் பங்களாதேஷ் அனுபவமும் - தோழர் சுப்ரபாரதி மணியன்.
Tamil Prince Podcast 👼
8 minutes 38 seconds
3 years ago
பால் பேத வன்முறையும் பங்களாதேஷ் அனுபவமும் - தோழர் சுப்ரபாரதி மணியன்.
எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அவர்களின் சமீபத்திய தொகுப்பான, “பால் பேத வன்முறையும் பங்களாதேஷ் அனுபவமும்' என்ற கட்டுரைத் தொகுப்பை நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இத்தொகுப்பில் டாக்கா நகர பயணத்தினூடான தனது அனுபவங்களை விளிம்பு நிலை மக்களோடு தொடர்புபடுத்தி கட்டுரைகளாகக் கொடுத்துள்ளார்.
பத்துக் கட்டுரைகள் அடங்கிய இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள சில கட்டுரைகள் நீண்ட காலமாக நிகழ்ந்து கொண்டிருக்கக் கூடிய பெண்களின் மீதான நேரடியான மற்றும் மறைமுகமான வன்முறைகளைப் பேசுகிறது.
பாலியல் வன்முறை என்பது நேரடியான பலாத்காரமாக இல்லாமல் எப்படியெல்லாம் பால்பேத வன்முறையாக நிகழ்கிறது என்ற கோணத்தில் இவர் குறிப்பிட்டிருக்கும் தரவுகள் அதிர்ச்சியளிக்கின்றன. டாக்காவின் ஒரு பத்திரிகை வெளியிட்ட செய்திகளில் வெளியான சில சம்பவங்களான சிலவற்றை முன்வைக்கிறார்.
ஜம்காரா பகுதியின் பின்னலாடைத் தொழிலாளியான 20 வயது இளம்பெண் நான்கு நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறாள் அவளது கணவன் ஓட்டுனராகப் பணியாற்றுகிறார். வீட்டு வாடகை செலுத்த முடியாத நிலையில் பணத்திற்காக கணவனின் முன்பே இந்த வன்முறை நடந்திருக்கிறது.
தொடர்ந்து இக்கீச்சொலி கேட்டு விட்டு புத்தகத்தை படித்து விட்டு தங்களது விமர்சனங்களை பகிருங்கள்.
Tamil Prince Podcast 👼
Hi everyone,
Am from fictional character of book of mirdhath.
Books, cinema, Encyclopedia, Daily politics of world!