
பூழியர் கோன் வெப்பு ஒழித்த புகலியர் கோன் கழல் போற்றி
ஆழி மிசைக் கல் மிதப்பில் அணைந்த பிரான் அடி போற்றி
வாழி திரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி
ஊழி மலி திரு வாதவூரர் திருத்தாள் போற்றி
- ( உமாபதி சிவம் )
பாண்டிய அரசனின் ஜுரத்தைத் தீர்த்த திருஞான சம்பந்தர் திருவடிகளுக்கு வணக்கம்.
கடல்மேல் ஒரு கல்லே தெப்பமாக மிதந்து கரை அடைந்த திருநாவுக்கரசர் திருவடிகளுக்கு வணக்கம்.
திருநாவலூரில் அவதரித்த சுந்தரர் திருவடிகளுக்கு வணக்கம்.
என்றும் நிலைத்த புகழ் உடைய மாணிக்க வாசகர் திருவடிகளுக்கு வணக்கம்