
பீகாரில் வெற்றி ஏற்படுத்திய பெண்களுக்கான ரூ 10,000 திட்டம் . அதேபோல பொங்கல் பரிசு கொடுக்க மு.க ஸ்டாலின் பிளான். 'உரிமைத் தொகையை ரூ 2000/-மாக உயர்த்தலாமா?' என்றும் ஆலோசனை. இன்னொருபக்கம் திமுக, அதிமுக என யாருக்கும் பிடிகொடுக்காமல் இறங்கி ஆடி வருகிறார் பிரேமலதா. நேற்று பழனி கூட்டத்திலும், 'சொன்ன நேரத்துக்கு மாநாட்டுக்கு சென்றவர் கேப்டன். அவர் கூட்டத்தில் 41 பேர் பலியெல்லாம் இல்லை' என விஜய்யை சீண்டியுள்ளார். பிரேமலதாவின் பிளான் என்ன? மு.க ஸ்டாலினும், எடப்பாடியும், ஏன் தேமுதிக-வை எதிர்ப்பார்க்கின்றனர்?