
'எடப்பாடி - பியூஸ் கோயல்' சந்திப்பு நிகழ்ந்துள்ளது. தொகுதி பங்கீடு, வலுவான கூட்டணி, முக்கியமாக இருமுனை போட்டியை கட்டமைக்க வேண்டும் என பல விஷயங்களை ஆலோசித்துள்ளனர். இதில் 60 தொகுதிகள் வரை பாஜக எதிர்பார்ப்பதாகவும் தகவல்கள். முக்கியமாக 'விஜய் நமக்கான வாக்குகளை ஸ்பாய்ல் செய்யக் கூடியவராக இருப்பார் என்றும் அதை தடுக்க என்ன செய்யலாம்?' என்றும் ஆலோசித்துள்ளனர்.