மதுரை, நெல்லை, கோவை, திருச்சி என சென்னை என்பது தமிழக மக்களால் நிரம்பியது. இங்கே குஜராத்தி, ராஜஸ்தான், பீகார், ஒடிசா, வங்காளம், பஞ்சாபி என எல்லா இந்திய பிராந்திய மக்களும் வசிக்கிறார்கள். பெரு நகரம் அப்படி கலவையான மக்களைக் கொண்டதாகத்தான் இருக்கும்
பகோடா என்பது காசுகளில் குறைந்த மதிப்பு உடையது. பகோடா என்ற உணவுப் பண்டத்தின் பெயர் அதற்கு ஏன் வந்தது என்பதற்கு, உல்டாவாக பதில் வருகிறது.
சரியான சில்லறை கொடுக்கவும் என்பது பஸ்ஸில் நிரந்தரப் பொன்மொழி. ஒரு காசு, இரண்டு காசு, அரையணா எனப்பட்ட மூன்று காசு, ஐந்து காசு, பத்து காசு, 20 காசு, நாலணா எனப்பட்ட 25 காசு.
'சென்னை நகரம் அழிக்கப்படும்' என்று புரளி கிளப்புபவர்களைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் அளிக்கப்படும் என்று ஆங்கிலேய அரசு அறிவித்தது.
தொலைக்காட்சி தரும் தொல்லை போதாது என்று டி.வி. ஆன்டெனா ஒருபக்கம் தொல்லை கொடுக்கும். காற்றில் அது வேறு பக்கம் திரும்பிவிட்டாலும் டி.வி-யில் படம் தெரியாது
தி.நகர் ரங்கநாதன் தெரு எப்படி மாலை ஐந்து மணிக்கு ஆளரவம் இல்லாமல் இருந்தது என்பதைத்தான் பார்க்கப் போகிறோம்.
கேஸ் போட்டு மீண்டும் ரேஸ் தொடங்கப்பட்டது. ஆனால், முன்பு போல வரவேற்பு இல்லை. ஏராளமான சட்டதிட்டங்கள்... நெருக்கடிகள்... ரேஸ் சோபை இழந்தது.
முதன் முதலில் திருத்தணி முருகனை துரையோடு இணைத்த சம்பவம்தான் திருத்தணி படிஉற்சவம் விழா.அது ஆங்கிலப் புத்தாண்டுக்கு முந்தைய இரவு திருத்தணிப் படிக்கட்டுகளில் நடைபெறும்
சென்ன கேசவ பெருமாள் கோயிலில் இருந்து திருப்பதி குடை புறப்பட்டதுமே, 'குடை யானை கவுனி தாண்டிடுச்சா' என ஓட்டேரி, அயனாவரம் முதல் திருப்பதி வரைக்குமே பெரிய செய்தியாகப் பேசுகிறார்கள்.
19-ம் நூற்றாண்டில் உப்பு, பிரிட்டாஷாரின் வேலிக்குள் கைதியாகக் கிடந்தது.இந்தியாவுக்குக் நெடுக்காக வேலி அமைத்து கடற்கரையில் இருந்து எடுக்கப்படும் உப்பை, நாட்டுக்குள் செல்லவிடாமல் தடுத்தனர்.
இந்தியாவில் கொஞ்சம் இடம் வாங்கிவிட்டால் என்ன என்ற எண்ணத்தில் செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டுவதற்கான இடத்தை,விஜய நகரத்தின் குறுநில மன்னராக இருந்த வேங்கடப்ப நாயக்கரிடம் இருந்து வாங்கினர்.
70 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த பல ஏரிகள் இப்போது இல்லை. நகரம் வளர வளர அதற்கு ஏற்ப நீர் நிலையும் வளர வேண்டும் என்பதுதான் நேர்மையான விகிதம். ஆனால்,
குதிரை லாயம் இருந்த இடத்தை உருது மொழியில் (?) `கோடோ பாக்’ என்பார்கள். அங்கு இருக்கும் ரயில் நிலையத்தில் நிறைய குதிரை வண்டிகள் நிற்கும். அதுதான் கோடம்பாக்கம் என்று ஆகிவிட்டது.
மதராசப்பட்டணம் படத்தில் சென்ட்ரலுக்கு எதிரே காட்டப்படும் படகு சவாரிக்காட்சிகள் பக்கிங்ஹாம் கர்னாடிக் கால்வாய்தான். உலகிலேயே ஒரே இடத்தில் நீர்வழி, நிலவழி, ரயில்வழிப் பாதை அமைக்கப்பட்ட இடம் அதுதான் என்று அந்த நாளிலே ஒரு குறிப்பு வெளியானது.
பின்னி நிறுவனம் தனியாக துணிக்கடைகள் நடத்தியது. அங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சலுகை விலையில் துணிகள் விற்பனை செய்தது.
அண்ணா மேம்பாலத்தில் இருந்து அண்ணா சிலைக்குச் செல்வதற்குள் நாம் கடக்கும் திரையரங்குகள்... சபையர், புளூ டைமண்ட், எமரால்டு, ஆனந்த், லிட்டில் ஆனந்த், அலங்கார், வெலிங்க்டன், தேவி பாரடைஸ், சித்ரா, கெயிட்டி, காசினோ, பாரகன்..
கமல்ஹாசன் நடித்த 'நம்மவர்', 'மகளிர் மட்டும்' படங்களின் படப்பிடிப்புகள் அங்கே நடந்தன. அதனுள்ளே நாகிரெட்டியாரின் பிரமாண்டமான பங்களா ஒன்று இருக்கும்.
வாயற்ற ஜீவன்களான வனவிலங்குகளை அப்புறப்படுத்தியது போல இவர்களை சுலபமாக அகற்ற முடியவில்லை. மூர்மார்க்கெட்டுக்குப் பின்னால்தான் மாநகராட்சி நடத்திய அந்த ஜூ இருந்தது.
ராஜா’ என்றால் திரும்பிப் பார்க்கும். மக்கள் அடிக்கடி அந்தப் பெயரைச் சொல்லி அழைத்து, அதை மிகுந்த வெறுப்படையச் செய்த காலகட்டத்தில் அது திரும்பிப் பார்ப்பதை நிறுத்திவிட்டது.
பாரிமுனையில் உள்ள உயர் நீதிமன்றம், சட்டக்கல்லூரி, எழும்பூரில் உள்ள சிற்பக் கலை கல்லூரி, மியூசியம், கன்னிமாரா நூலகம் போன்றவை இவரால் கட்டப்பட்டவை.