Home
Categories
EXPLORE
True Crime
Comedy
Society & Culture
Business
Sports
TV & Film
Technology
About Us
Contact Us
Copyright
© 2024 PodJoint
00:00 / 00:00
Sign in

or

Don't have an account?
Sign up
Forgot password
https://is1-ssl.mzstatic.com/image/thumb/Podcasts211/v4/2e/89/e9/2e89e93f-8a94-48a0-d12f-d1498d7739dd/mza_14586751599240320472.jpg/600x600bb.jpg
SBS Tamil - SBS தமிழ்
SBS
1245 episodes
1 day ago
Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.
Show more...
Daily News
Society & Culture,
News
RSS
All content for SBS Tamil - SBS தமிழ் is the property of SBS and is served directly from their servers with no modification, redirects, or rehosting. The podcast is not affiliated with or endorsed by Podjoint in any way.
Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.
Show more...
Daily News
Society & Culture,
News
Episodes (20/1245)
SBS Tamil - SBS தமிழ்
இஞ்சியின் மருத்துவ குணங்கள்
நாம் அன்றாடம் சமைக்கும் உணவு வகைகளில் நாம் பயன்படுத்தும் பொருட்களில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. அவை பற்றி தெரிந்துக்கொள்ளும் முயற்சியே இந்த நிகழ்ச்சி. அந்த வகையில் இன்று 'இஞ்சி' பற்றி அறிந்துக்கொள்வோம். இஞ்சியின் மருத்துவ குணங்கள், அன்றாடம் நாம் எப்படி இலகுவாக இஞ்சியை உட்கொள்ளலாம் என்பதை சித்த வைத்தியர் டாக்டர் செல்வி மணி அவர்களிடமிருந்து அறிந்துக்கொள்வோம். நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி
Show more...
1 day ago
8 minutes 53 seconds

SBS Tamil - SBS தமிழ்
இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (16 – 22 நவம்பர் 2025)
ஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (16 – 22 நவம்பர் 2025) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: செல்வி.
Show more...
2 days ago
6 minutes 46 seconds

SBS Tamil - SBS தமிழ்
‘Everyone wants to matter’: How we can prevent hate and division in our neighbourhoods - அயலவர்களுடன் வெறுப்பும் பாகுபாடும் உருவாகாமல் தடுக்க என்ன செய்யலாம்?
Our social cohesion is under threat. But building stronger community ties can help grow connection, trust and shared belonging. - நமது சமூக ஒருமைப்பாடு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. ஆனால் வலுவான சமூக இணைப்புகளை உருவாக்குவது தொடர்பு, நம்பிக்கை மற்றும் பகிரும் உணர்வை வளர்க்க உதவும்.
Show more...
2 days ago
6 minutes 3 seconds

SBS Tamil - SBS தமிழ்
செய்தியின் பின்னணி: ஆஷஸ், காலத்தை கடந்து நிற்கும் கிரிக்கெட்டின் மரபுக் கதை
“ஆஷஸ் (The Ashes)” என்பது கிரிக்கெட் உலகின் மிகவும் பிரபலமான, பழமையான மற்றும் தீவிரமான போட்டிகளில் ஒன்றாகும். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கிடையில் நடைபெறும் இப்போட்டியின் 74வது தொடர் இன்று பேர்த் நகரில் ஆரம்பமாகிறது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Show more...
3 days ago
8 minutes 12 seconds

SBS Tamil - SBS தமிழ்
‘தமிழர் தேசிய இனம் என்பதை ஏற்காதவர்களோடு இணைந்து செயல்பட நான் தயாரில்லை’ - மாத்தளை சோமு
மாத்தளை சோமு அவர்கள் தற்கால தமிழ் இலக்கிய உலகின் பெரும் ஆளுமைகளில் ஒருவர். இலக்கியத்திற்காக பல விருதுகளை வென்றவர். ஆஸ்திரேலியாவில் வாழ்ந்துகொண்டு, முழுநேர எழுத்தாளராக இயங்கும் அவர், புலம் பெயர் படைப்பிலக்கியத்துக்கும், வரலாற்று ஆய்வுக்கும் செய்துவரும் பணிகள் பெரும் பாராட்டை பெற்றுவருகின்றன. மலையக இலக்கியத்தின் வளர்ச்சிக்கும் அவர் பெரும் பங்காற்றி வருகின்றார். "அந்த உலகத்தில் இந்த மனிதர்கள்" (சாகித்திய விருது பெற்ற நாவல்), "எல்லை தாண்டா அகதிகள்", "ஒற்றைத்தோடு" ஆகிய படைப்புகள் அவரின் முத்திரை படைப்புகள். இலங்கை போர்ச் சூழல், அகதிகள் வாழ்க்கை, மலையக மக்களின் வரலாறு, மற்றும் ஈழத் தமிழ்ப் பெண்கள் மீதான அத்துமீறல்கள் போன்ற அதிர்ச்சி தரும் யதார்த்தங்களைப் அவர் பதிவு செய்திருப்பதன்மூலம் தன்னை ஒரு பெரும் படைப்பாளியாக நிலை நிறுத்தியுள்ளார். “மாத்தளை சோமு 1 0 0 சிறுகதைகள்” என்ற தொகுப்பை இரு பாகங்களின் வெளியீட்டு விழா நவம்பர் மாதம் 3 0 ஆம் தேதி சிட்னியின் Toongabie நகரில் நடைபெறும் பின்னணியில் மாத்தளை சோமு அவர்களை SBS ஒலிப்பதிவு கூடத்தில் வைத்து சந்தித்து உரையாடுகிறார் றைசெல். நேர்முகம் பாகம்: 3
Show more...
3 days ago
8 minutes 29 seconds

SBS Tamil - SBS தமிழ்
இன்றைய செய்திகள்: 21 நவம்பர் 2025 - வெள்ளிக்கிழமை
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 21/11/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
Show more...
3 days ago
4 minutes 42 seconds

SBS Tamil - SBS தமிழ்
‘விருது தந்தால் வாங்குவேன்; விருதைத்தேடி போவதில்லை’ - மாத்தளை சோமு
மாத்தளை சோமு அவர்கள் தற்கால தமிழ் இலக்கிய உலகின் பெரும் ஆளுமைகளில் ஒருவர். இலக்கியத்திற்காக பல விருதுகளை வென்றவர். ஆஸ்திரேலியாவில் வாழ்ந்துகொண்டு, முழுநேர எழுத்தாளராக இயங்கும் அவர், புலம் பெயர் படைப்பிலக்கியத்துக்கும், வரலாற்று ஆய்வுக்கும் செய்துவரும் பணிகள் பெரும் பாராட்டை பெற்றுவருகின்றன. மலையக இலக்கியத்தின் வளர்ச்சிக்கும் அவர் பெரும் பங்காற்றி வருகின்றார். "அந்த உலகத்தில் இந்த மனிதர்கள்" (சாகித்திய விருது பெற்ற நாவல்), "எல்லை தாண்டா அகதிகள்", "ஒற்றைத்தோடு" ஆகிய படைப்புகள் அவரின் முத்திரை படைப்புகள். இலங்கை போர்ச் சூழல், அகதிகள் வாழ்க்கை, மலையக மக்களின் வரலாறு, மற்றும் ஈழத் தமிழ்ப் பெண்கள் மீதான அத்துமீறல்கள் போன்ற அதிர்ச்சி தரும் யதார்த்தங்களைப் அவர் பதிவு செய்திருப்பதன்மூலம் தன்னை ஒரு பெரும் படைப்பாளியாக நிலை நிறுத்தியுள்ளார். “மாத்தளை சோமு 1 0 0 சிறுகதைகள்” என்ற தொகுப்பை இரு பாகங்களின் வெளியீட்டு விழா நவம்பர் மாதம் 3 0 ஆம் தேதி சிட்னியின் Toongabie நகரில் நடைபெறும் பின்னணியில் மாத்தளை சோமு அவர்களை SBS ஒலிப்பதிவு கூடத்தில் வைத்து சந்தித்து உரையாடுகிறார் றைசெல். நேர்முகம் பாகம்: 2
Show more...
3 days ago
13 minutes 24 seconds

SBS Tamil - SBS தமிழ்
இலங்கை: இந்த வார முக்கிய செய்திகள்
இலங்கை தமிழரசுக் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் அதிபர் அனுரகுமார திசநாயக்கவை சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேச்சு மற்றும் வடக்கு , கிழக்கில் போதைப்பொருள் பாவனைக்கு இராணுவத்தினர் ஆதரவளிப்பதாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குற்றச்சாட்டிற்கு ஆளுந்தரப்பு மறுப்பு. இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி”நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Show more...
3 days ago
8 minutes 20 seconds

SBS Tamil - SBS தமிழ்
உலகம்: இந்த வார செய்திகளின் தொகுப்பு
உக்ரைனில் போர் நிறுத்தம்? அமெரிக்கா, ரஷ்யாவின் புதிய திட்டம்; காசாவில் போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் தாக்குதல்; சூடானில் உள்நாட்டு யுத்தம்: முடிவுக்கு கொண்டு வர உதவுவதாக டிரம்ப் அறிவிப்பு; பிரேசிலில் COP30 மாநாடு; DR காங்கோவில் சுரங்க விபத்து: 32 பேர் பலி; நைஜீரியாவில் 25 பெண் குழந்தைகள் கடத்தல்; ஆப்பிரிக்காவில் மோசமான பாதுகாப்பு சூழ்நிலை: ஐ.நா. எச்சரிக்கை உள்ளிட்ட உலகச்செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
Show more...
3 days ago
8 minutes 26 seconds

SBS Tamil - SBS தமிழ்
‘வரலாறு தெரியாத சமூகமாக தமிழ் மக்கள் இருப்பது வருத்தமளிக்கிறது’ – மாத்தளை சோமு
மாத்தளை சோமு அவர்கள் தற்கால தமிழ் இலக்கிய உலகின் பெரும் ஆளுமைகளில் ஒருவர். இலக்கியத்திற்காக பல விருதுகளை வென்றவர். ஆஸ்திரேலியாவில் வாழ்ந்துகொண்டு, முழுநேர எழுத்தாளராக இயங்கும் அவர், புலம் பெயர் படைப்பிலக்கியத்துக்கும், வரலாற்று ஆய்வுக்கும் செய்துவரும் பணிகள் பெரும் பாராட்டை பெற்றுவருகின்றன. மலையக இலக்கியத்தின் வளர்ச்சிக்கும் அவர் பெரும் பங்காற்றி வருகின்றார். "அந்த உலகத்தில் இந்த மனிதர்கள்" (சாகித்திய விருது பெற்ற நாவல்), "எல்லை தாண்டா அகதிகள்", "ஒற்றைத்தோடு" ஆகிய படைப்புகள் அவரின் முத்திரை படைப்புகள். இலங்கை போர்ச் சூழல், அகதிகள் வாழ்க்கை, மலையக மக்களின் வரலாறு, மற்றும் ஈழத் தமிழ்ப் பெண்கள் மீதான அத்துமீறல்கள் போன்ற அதிர்ச்சி தரும் யதார்த்தங்களைப் அவர் பதிவு செய்திருப்பதன்மூலம் தன்னை ஒரு பெரும் படைப்பாளியாக நிலை நிறுத்தியுள்ளார். “மாத்தளை சோமு 1 0 0 சிறுகதைகள்” என்ற தொகுப்பை இரு பாகங்களின் வெளியீட்டு விழா நவம்பர் மாதம் 3 0 ஆம் தேதி சிட்னியின் Toongabie நகரில் நடைபெறும் பின்னணியில் மாத்தளை சோமு அவர்களை SBS ஒலிப்பதிவு கூடத்தில் வைத்து சந்தித்து உரையாடுகிறார் றைசெல். நேர்முகம் பாகம்: 1
Show more...
3 days ago
15 minutes 14 seconds

SBS Tamil - SBS தமிழ்
நாட்டின் வட்டிவீதம் மீண்டும் அதிகரிக்குமா?
ஆஸ்திரேலியாவில் பணவீக்கம் அதிகரித்துள்ள பின்னணியில் நாட்டின் வட்டிவீதம் மீண்டும் அதிகரிக்குமா என்பது உட்பட பல கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் NewGen Consulting Australasia நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் இருபது ஆண்டுகளுக்கும் மேலான தொழில்துறை அனுபவம் கொண்ட எமில் ராஜா அவர்கள். அவர் ஒரு முன்னோடியான தொழில்முனைவோர் மற்றும் பொருளாதார எதிர்காலவியலாளர், நவீன தொழில்நுட்பம், நிதி சேவைகள் மற்றும் வணிக மாற்றத்திற்கான தீர்வுகளை உருவாக்குவதில் முன்னிலை வகிக்கிறார். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Show more...
3 days ago
14 minutes 29 seconds

SBS Tamil - SBS தமிழ்
செய்தியின் பின்னணி : புகலிடக்கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்ப அரசு படகுகள் வாங்குகிறதா?
அண்மையில், Broome நகரத்தில் நங்கூரமிட்டிருந்த ஒரு Australian Border Force (ABF) கப்பலில், மாற்றியமைக்கப்பட்ட நான்கு மீன்பிடிப் படகுகள் இருந்தன. இதன்மூலம், நாடு முழுவதும் மீன்பிடிப் படகுகளை வாங்கி மாற்றும் காமன்வெல்த் அரசு திட்டம் தொடர்ச்சியாக செயல்பட்டு வருவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
Show more...
3 days ago
7 minutes 3 seconds

SBS Tamil - SBS தமிழ்
அமெரிக்க அரசியலை பரபரப்பாக்கியிருக்கும் Epstein Files - பின்னணி என்ன?
அமெரிக்காவில் Epstein files விவகாரம் மிகவும் பரபரப்பாக பேசப்படுகிறது. அதிபர் Donald Trumpஐ தொடர்புபடுத்தி பேசப்படும் Epstein Files என்றால் என்ன, அதன் பின்னணி என்ன என்று விளக்குகிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் மூத்த ஒலிபரப்பாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.
Show more...
4 days ago
9 minutes 17 seconds

SBS Tamil - SBS தமிழ்
சிட்னியில் 12 ஆவது சர்வதேச வர்த்தக மாநாடு!
உலக தமிழ் வர்த்தக சபையும் (World Tamil Chamber of Commerce), Greater Cumberland Chamber of Commerce அமைப்பும் இணைந்து 12வது ஆண்டு சர்வதேச வர்த்தக மாநாட்டை சிட்னி நகரில் நடத்துகின்றன. இந்திய அரசு மற்றும் Invest NSW ஆதரவுடன் டிசம்பர் 6 & 7 ஆகிய நாட்களில் Blacktown Leisure Centre, Stanhopeயில் நடைபெறும் இம்மாநாடு குறித்து விளக்குகிறார் Greater Cumberland Chamber of Commerceயின் தலைவர் இம்மானுவேல் செல்வராஜ் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.
Show more...
4 days ago
7 minutes 34 seconds

SBS Tamil - SBS தமிழ்
ஆண்களைப் பாதிக்கும் முக்கிய உடல்நலப் பிரச்சினைகளும் தீர்வுகளும்
சர்வதேச ஆண்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19ம் திகதி கடைப்பிடிக்கப்படுகின்றது. இந்நிலையில் ஆண்கள் தமது உடல்நலனில் மாத்திரமல்லாமல் மனநலனிலும் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் இதற்கான உதவிக்குறிப்புகளையும் பகிர்ந்துகொள்கிறார் மெல்பனில் குடும்ப மருத்துவராகப் பணியாற்றும் Dr நளிமுடீன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Show more...
4 days ago
15 minutes 28 seconds

SBS Tamil - SBS தமிழ்
இன்றைய செய்திகள்: 20 நவம்பர் 2025 வியாழக்கிழமை
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 20/11/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
Show more...
4 days ago
4 minutes 37 seconds

SBS Tamil - SBS தமிழ்
‘அதிகாரம் என்பது ஆணுக்கு ஒரு போதை, பெண்ணுக்கு அது வலிமை’ – சல்மா
ராஜாத்தி சல்மா, தமிழ் இஸ்லாமிய பின்னணி கொண்ட கவிஞர், எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதியாவார். அண்மையில் ஆஸ்திரேலியா வருகை தந்திருந்த அவரை சிட்னி SBS ஒலிப்பதிவு கூடத்தில் சந்தித்து உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Show more...
4 days ago
25 minutes 57 seconds

SBS Tamil - SBS தமிழ்
சிட்னியில் இந்தியர் மீது இனவெறித்தாக்குதல்? NSW அரசு கவலை!
Parramatta Westfield Shopping மையத்தில் இந்தியப் பின்னணிகொண்ட ஒருவர் இனவெறித் தாக்குதலை எதிர்கொண்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலான செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Show more...
4 days ago
2 minutes 47 seconds

SBS Tamil - SBS தமிழ்
MiniPod: Piece of cake | Words we use - MiniPod: Piece of cake | Words we use
Learn a new phrase and make your English sound more natural and interesting. Words We Use is a bilingual series that helps you understand idioms like 'a piece of cake' - ஒரு புதிய சொற்றொடரை கற்று, உங்கள் ஆங்கிலம் மேலும் இயல்பாகவும் புதுமையாகவும் ஒலிக்கச் செய்யுங்கள். ‘Words We Use’ என்பது ‘a piece of cake’ போன்ற சொற்பிரயோகங்களை நீங்கள் எளிதில் புரிந்துகொள்ள உதவும் இருமொழி தொடர் நிகழ்ச்சியாகும்.
Show more...
4 days ago
4 minutes 5 seconds

SBS Tamil - SBS தமிழ்
செய்தியின் பின்னணி: ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் பள்ளிகள் ஏன் மூடப்படுகின்றன?
இறக்குமதி செய்யப்பட்ட நிறமூட்டப்பட்ட play sand விளையாட்டு மணல் தயாரிப்புகள், asbestos கலப்புடன் இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து அதனைத் திரும்பப்பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் அதேநேரம் பல பள்ளிகளும் இதனால் மூடப்பட்டுள்ளன. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். ஆங்கில மூலம்: SBS Newsயின் Briana Charles.
Show more...
5 days ago
7 minutes

SBS Tamil - SBS தமிழ்
Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.