கம்பராமாயணம்...
கருடன் இராமனை துதித்தல்.
காண்டம் - யுத்த காண்டம்.
படலம் - நாகபாசப் படலம்.
பாடல் எண் - 583.
நாள் - ஐந்நூற்று எண்பத்துமூன்றாவது நாள்.
மீளாத வேதம், முடிவின்கண், நின்னை
மெய்யாக மெய்யின் நினையும்
கேளாத என்று பிற என்று சொன்ன
கெடுவார்கள் சொன்ன கடவான்
மாளாத நீதி இகழாமை நின் கண்
அபிமானம் இல்லை வறியோர்
ஆளாயும் வாழ்தி, அரசாள்தி, ஆர், இவ்
அதிரேக மாயை அறிவார்.
விளக்கம் - மெய்யில் இருந்து விலகி மீளுதல் இல்லாத வேதங்களின் முடிபொருளாய் உள்ள வேதச் சிகையாய் விளங்கும் உபநிடதங்கள் உன்னைப் பற்றி கூறும் இடத்து உண்மைப் பொருளாகக் கொண்டு உண்மை மெய்யுணர்வாகிய பதிஞானத்தால் ஆய்ந்து கூறும் அவ்வாறு இருக்கும் போது நான் கடவுளைக் கண்டேன் என்று ஒருவர் கூறும் கூற்று கேள்விப் படாத கூற்று எனவும் இக் கூற்று வேறு காரணத்திற்காக கூறப்பட்டது (கடவுள் உண்மையில் இல்லை) என்றும் கூறுகிற கூற்று அறிவில்லாத நாத்திகர்கள் சொன்னதாகும், தாங்கள் கூறிய கூற்றினைக் கடவாது அவர்கள் ஒரு போதும் பழுதுபடாத, சாத்திர, நீதி முறை பழுதுபடாமலும், உன்னிடம் பக்தி செலுத்தாமலும் கெட்டு அழிவார்கள், ஆனால் நீயோ பத்துடை அடியவர்க்கு எளிய ஏவல் ஆளாகவும் வாழ்கிறாய், அனைத்து உலகங்களையும் அரசாள்கிறாய், இந்த மாயச் செயலை யார் அறிவார்...
கு. பாஸ்கர்.... அபுதாபி
Show more...